×

மதுரையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

மதுரை, டிச. 2: உலகம் முழுவதும் டிச.1ம் தேதி எய்ட்ஸ் தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் எய்ட்ஸ் தடுப்பு தின விழிப்புணர்வு பிரசார பேரணி நேற்று நடைபெற்றது. டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி வரவேற்புரை ஆற்றினார்.

கலெக்டர் சங்கீதா தலைமை வகித்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன், அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், உசிலம்பட்டி நலப்பணிகள் இணை இயக்குனர் செல்வராஜ், அரசு மருத்துவமனை நுண்ணுயிரியல் துறை இயக்குனர் தனலட்சுமி, மாநகராட்சி நகர் நல அலுவலர் எஸ்.வினோத்குமார், அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் வி.ஆர்.கணேசன், என்.ஆர்.டி பிளஸ் மைய நோடல் ஆபீசர் நடராஜன், உதவி மருத்துவ கண்காணிப்பாளர் தர்மராஜ், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (காசநோய்) ராஜசேகரன், மாவட்ட ரத்த வங்கி அலுவலர் எசிந்தா, வி.என்.பி பிளஸ் டிராப் இன் சென்டர் திட்ட இயக்குனர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி பிளஸ் மைய மருத்துவ அலுவலர் குமுதவள்ளி நன்றி கூறினார். இந்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி பனகல் சாலை வழியாக அரசு மருத்துவமனை கூட்ட அரங்கு வரை சென்று நிறைவடைந்தது. தொடர்ந்து கூட்டரங்கில் உறுதி மொழி எடுப்பு, கையெழுத்து பிரசார துவக்கம், தகவல் தொடர்பு சாதனங்கள் வெளியீடு, கருத்தரங்கம், மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு, சிறந்த சேவைகளுக்கான பாராட்டு, ஆட்டோ டாப் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்ற விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்றது.

The post மதுரையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : World AIDS Day awareness ,Madura ,Madurai ,AIDS Prevention Day ,District ,World AIDS Day awareness rally ,Dinakaran ,
× RELATED மதுரையில் சாலையோர கடைகள் மீது ரோடு...