×

வீரபாண்டி முல்லையாற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டது

தேனி, டிச. 2: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள முல்லையாற்றில் நாட்டின மீன்களை இருப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 2 லட்சம் நாட்டு மீன் குஞ்சுகளை பெரியகுளம் எம்எல்ஏ, கலெக்டர், வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் விட்டனர். தேனி அருகே வீரபாண்டியில் கன்னீஸ்வரமடையார் கோயில் அருகே ஓடும் முல்லையாற்றில் பாரதப்பிரதமர் மீ்ன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாட்டின மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் திட்டத்தின்படி, நேற்று மீன்குஞ்சுகளை ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார்.

பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி, மீனவர் நலவாரிய உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின்போது, நாட்டின மீன்களான கட்லா, ரோகு, தேன்கெண்டை, மிருகால் ஆகிய மீன்குஞ்சுகளை கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ சரவணக்குமார், சேர்மன் கீதாசசி ஆகியோர் ஆற்றில் விட்டனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆறுகளில் நாட்டின மீன் இனங்களை இருப்பு வைக்கும் திட்டத்தின்படி, தேனி மாவட்டத்தில் வைகையாற்றில் 40 ஆயிரம் மீன்குஞ்சுகளையும், சுருளியாற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகளையும் விட திட்டமிடப்பட்டது. இதன்படி, இவ்விரு ஆறுகளிலும் 2.4 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டது, என்றார்.

இந்நிகழ்ச்சியில் மீன்வள மேம்பாட்டுத் துறை துணை இயக்குநர் காசிநாதபாண்டியன், உதவி இயக்குநர் ராஜேந்திரன், மீன்வளத்துறைக்கான வைகை அணை ஆய்வாளர் கவுதம், மஞ்சளாறு அணை ஆய்வாளர் மணிகண்டன், தமிழ்நாடு மீனவர் யூனியன் தேனி மாவட்ட தலைவர் சலீம், தேனி நகர முன்னாள் திமுக பொறுப்பாளர் பாலமுருகன் மற்றும் தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post வீரபாண்டி முல்லையாற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Veerapandi Mullaiat ,Theni ,Mullaianthi ,Weerabandi ,Teni ,Veerapandi Mullaiatri ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்