×

கரூரில் பரவும் மர்மகாய்ச்சல்

 

கரூர், டிச. 2: கரூர் மாநகர பகுதிகளில் மர்ம காய்ச்சல் அதிகரித்துவருகிறது. கரூர் மாநகராட்சியில் வாங்கப்பாளையம், ராயனூர், சணப்பிரட்டி, வேலுசாமிபுரம், நரிகட்டியூர், தொழிற்பேட்டை, இனாம்கரூர், குளத்துப்பாளையம், தாந்தோணிமலை சவுரிமுடித்தெரு, குறிஞ்சிநகர், வெங்கடேஷ்வரா நகர் போன்ற புறநகர்ப்பகுதிகள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை காலங்களில் காய்ச்சல் பரவும் சமயங்களில் இந்த பகுதிகளில்தான் சுகாதாரத்துறை அதிகளவில் கவனம் செலுத்தி முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த பகுதிகளில் அதிகளவு குடியிருப்புகள் இருந்தாலும் சுகாதார மேம்பாட்டு வசதி மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், இதுபோன்ற பகுதிகளில் மர்ம காய்ச்சல் மற்றும் சளி போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளி மாணவ, மாணவிகளும் இந்த காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் இன்புளுயன்சா காய்ச்சல் பரவலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கரூரில் பரவும் மர்மகாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Karur ,Vangapalayam ,Rayanoor ,Sanapratti ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...