×

கரூர் மாநகராட்சி மண்டல அலுவலக கட்டிட பணிகள் மேயர் ஆய்வு

 

கரூர், டிச. 2: கரூர் மாநகராட்சியில் ரூ.2.50 கோடியில் கட்டப்படும் மண்டல அலுவலக கட்டிட பணிகளை மேயர் கவிதா கணேசன், ஆணையர் சரவணகுமார் ஆய்வு செய்தனர். கரூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கான புதிய அலுவலக கட்டிடம்பணி கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அருகில் நடைபெற்றுவருகிறது. மேயர் கவிதா கணேசன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், 3வது மண்டல குழு தலைவரும் கரூர் மத்திய கிழக்கு மாநகர பகுதி செயலாளருமான ஆர்.எஸ்.ராஜா, மாநகர நகர்நல அலுவலர் லட்சிய வர்ணா, உதவி செயற்பொறியாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆய்வுசெய்தனர்.

The post கரூர் மாநகராட்சி மண்டல அலுவலக கட்டிட பணிகள் மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Karur Municipal Corporation ,Karur ,Mayor ,Kavitha ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED செல்லாண்டிபாளையம் பகுதியில் வடிகால்...