×

விவசாய தொழிலாளர்களுக்கு தாட்கோ மான்யத்துடன் வங்கி கடன்

 

பெரம்பலூர்,டிச.2:பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு, தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை குறைந்த வட்டியில் கடனாக பெற்று வாங்கலாம் என மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக விவசாயத் தொழி லாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சேர்ந்த வர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு, அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின் படி திட்டத் தொகையில் 50சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ.5லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக்கழக நிதியிலியிருந்து பயனாளிகளுக்கு 6சதவீத மிகக் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர்வகுப்பினர் தாட்கோ இணையதள (www.tahdco.com < http://www.tahdco.com/ > )முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விபரங் களுக்கு பெரம்பலுார் தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post விவசாய தொழிலாளர்களுக்கு தாட்கோ மான்யத்துடன் வங்கி கடன் appeared first on Dinakaran.

Tags : TADCO ,Perambalur ,Perambalur district ,Adi Dravidas ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை