×

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

 

தஞ்சாவூர், டிச.2: தஞ்சாவூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கூடுதல் கலெக்டர் ( வளர்ச்சி ) ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் சமூகங்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி/ எய்ட்ஸ் தொற்றினால் குறைக்கும் செயலை முன்னெடுப்போம் என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆட்டோவிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. பேரணியில் மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் கலைவாணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், பொறியாளர் முத்துக்குமார், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : World AIDS Day Awareness Rally ,Thanjavur ,World AIDS Day ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர்...