×

நீடாமங்கலம் அருகே மின்னொளியில் மின்னிய சந்தனக்கூடு ஊர்வலம்

 

நீடாமங்கலம், டிச.2: பொதக்குடியில் மின்னொளியில் மின்னிய சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம், பொதக்குடியில் ஹஜ்ரத் நூர் முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்காவில் கடந்த நவம்பர் மாதம் 14 ம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, பூலாங்கொடி ஏற்றமும், பெரிய மினார் கொடியேற்றமும் நடைபெற்றது. நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு மின்சார சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. தர்ஹாவில், மின்சார விளக்குகளால் சந்தனக் கூடு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

மின்சார சந்தனக் கூட்டை, தர்ஹா முன்பு நிறுத்தப்பட்டு ஓதப்பட்டது. தொடர்ந்து, கொரடாச்சேரி – லெட்சுமாங்குடி பிரதான சாலை மற்றும் பொதக்குடி முக்கிய வீதிகள் வழியாக, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் இஸ்லாமியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட மற்ற சமூகத்தினர்கள் என ஏராளமானவர்கள் சந்தனம் பூசியும், பூக்களைத் தூவியும் வணங்கினர். சந்தனக் கூடு ஏற்பாடுகளை, ஊர் உறவின் முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்க நிர்வாகிகள், சந்தனக்கூடு உத்சவக்குழு, தர்ஹா பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post நீடாமங்கலம் அருகே மின்னொளியில் மின்னிய சந்தனக்கூடு ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Pothakudi ,Sandalwood Festival ,Tiruvarur District ,Pothakkudi ,
× RELATED நீடாமங்கலம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்