×

நொய்யல் ஆற்றில் ஆக்கிரமிப்பு பகுதிகள் ஆய்வு

 

தொண்டாமுத்தூர், டிச.2: பேரூர் வட்டம் பீட்டு பள்ளம் சங்கிலி கருப்பராயன் கோவில் வடபுறம் பேரூர் கிராமத்தில் உள்ள நொய்யல் ஆற்றில் ஒரு சிலர் ஆற்றின் குறுக்கே குழாய் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து புகார் எழுந்தது. இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து, பேரூர் வட்டாட்சியர் ஜோதிபாசு தலைமையில் பேரூர் வருவாய் ஆய்வாளர் கல்பனா வடவள்ளி வருவாய் ஆய்வாளர் சூரிய பிரபா கிராம நிர்வாக அதிகாரி சித்திரை சாவடி பேரூர் கிராம நிர்வாக அதிகாரி மேகலா மற்றும் வட்ட சார ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி. கீதா ஆகியோர்கள் அடங்கிய குழு ஆக்கிரமிப்பு பகுதியை நேரடியாக ஆய்வு செய்து உரிய நில அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சித்திரை சாவடிக்கு உட்பட்ட நொய்யல் ஆற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை உறுதி செய்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றிட நடவடிக்கை எடுக்க பேரூர் வட்டாட்சியர் பரிந்துரை செய்ததின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அருண் பிரசாந்த் தலைமையில் குழு ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நபர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்றிட உத்தரவிட்டடுள்ளனர் .

The post நொய்யல் ஆற்றில் ஆக்கிரமிப்பு பகுதிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Noyal River ,Thondamuthur ,Noyal ,Perur ,Karupparayan ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்டம் சித்திரைச்சாவடி அணைக்கட்டில் வெள்ளப்பெருக்கு