- நாகர்கோவில்
- குமாரி மாவட்டம்
- தீ
- துறை
- அதிகாரி
- சத்யகுமார்
- உதவி பிரிவு அலுவலர்கள்
- துரை
- இம்மானுவேல்
- தின மலர்
நாகர்கோவில், டிச.2 : குமரி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்யகுமார் மேற்பார்வையில், உதவி கோட்ட அலுவலர்கள் துரை, இமானுவேல் தலைமையில் மாவட்டம் முழுவதும் பள்ளிகள், மருத்துவமனைகள், தனியார் கட்டிடங்கள், வர்த்தக நிறுவனங்களில் தீ தடுப்பு செயல்முறை விளக்க முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாகர்கோவில் வில்லியம் மருத்துவமனையில் நேற்று தீ தடுப்பு செயல்முறை விளக்க முகாம் நடந்தது. மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். உயரமான கட்டிடத்தில் சிக்கி இருப்பவர்களை எவ்வாறு மீட்க வேண்டும். கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகளை மீட்பது எப்படி? , மருத்துவமனையில் உள்ள தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை தொடர்பாக தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். உதவி கோட்ட அலுவலர் துரை தலைமையில் இந்த முகாம் நடந்தது. இதில் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சூசன் வில்லியம்ஸ் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.
The post நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் தீ தடுப்பு முகாம் appeared first on Dinakaran.