×

ஆலப்புழா அருகே தொண்டையில் முறுக்கு சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி

திருவனந்தபுரம், டிச. 2: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள மாவேலிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜீஷ். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் வைஷ்ணவ் என்ற ஒரு ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று திவ்யா தன்னுடைய குழந்தைக்கு சாப்பிடுவதற்கு முறுக்கு கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு துண்டு அந்தக் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக வைஷ்ணவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

The post ஆலப்புழா அருகே தொண்டையில் முறுக்கு சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Alappuzha ,Thiruvananthapuram ,Vijeesh ,Mavelikkarai ,Alappuzha, Kerala ,Divya ,
× RELATED ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்