×

கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை: டி.கே.சிவகுமார் கருத்து

பெங்களூரு: தேர்தல் கருத்து கணிப்பில் நம்பிக்கை இல்லை; கர்நாடக சட்டபேரவை தேர்தல் முடிவை அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும் என மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறினார். பெங்களூரு சதாசிவாநகரிலுள்ள வீட்டில் துணை முதல்வரும் மாநில காங்.,கட்சி தலைவருமான டிகே சிவகுமார் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதியாகும். தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் உண்மை கிடையாது. மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் முடிவு வெளியாகும் முன்பு சில நிறுவனங்கள் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களில் வெற்றி கிடைக்கும் என கணிப்பு வெளியிட்டது. ஆனால், தேர்தல் முடிவு வெளியான போது அது முற்றிலும் தவறாகிவிட்டது. இது போல் தான் தேர்தல் கருத்து கணிப்புகளின் முடிவுகள் இருக்கும். அதே நேரம் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. களப்பணி ஆற்றிய போது இதை நேரில் அறிந்து கொண்டேன். 10 ஆயிரம் பேரிடம் கேட்டு அதன் முடிவுகள் தொகுதியின் வெற்றி தோல்வியை குறிக்கும் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாது. தேர்தல் முடிவு வெளியாக இன்னும் 24 மணி நேரம் உள்ளது. அதன் பிறகு உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரிந்து விடும், என்றார்.

The post கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை: டி.கே.சிவகுமார் கருத்து appeared first on Dinakaran.

Tags : DK Sivakumar ,Bengaluru ,Karnataka assembly election ,TK Shivakumar ,Dinakaran ,
× RELATED டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான 16...