×

கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் பராகுவே அதிகாரி டிஸ்மிஸ்

அசுன்சியன்: கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட பராகுவே அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நித்யானந்தா தற்போது கைலாசா என்ற நாட்டின் அதிபராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இணைய தளம் தொடங்கி அதில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். ஐநாவிலும் கைலாசா நாட்டு அதிகாரிகள் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் கைலாசா நாடு அங்கீகாரம் இல்லை என்பதை தெரிந்து அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தற்போது தென் அமெரிக்காவின் பராகுவே நாட்டுடன் கைலாசா அதிகாரிகள் ஒப்பந்தம் செய்தார்கள்.

அங்கு விவசாயத்துறைக்கு தேவையான ஆலோசனைகள் கைலாசா நாடு சார்பில் வழங்க இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்பின்னர் தான் கைலாசா பற்றிய உண்மை தகவல் தெரிய வந்தது. இதையடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பராகுவே நாட்டின் விவசாயத்துறை மூத்த அதிகாரி அர்னால்டோ சாமோரோ, விவசாய அமைச்சரின் தலைமைப் பணியாளர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த விஷயத்தில் தான் ஏமாந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் கைலாசா நாட்டின் பெயரில் வந்த போலி அதிகாரிகள் விவசாயத்துறை அமைச்சர் கார்லோஸ் கிமினெஸையும் சந்தித்ததாக சாமோரோ கூறினார்.

The post கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் பராகுவே அதிகாரி டிஸ்மிஸ் appeared first on Dinakaran.

Tags : Paraguay ,Kailash ,Kailasa ,Nithyananda ,India ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு