×

பிஆர்எஸ் கட்சி 25 இடங்களை கூட தாண்டாது தெலங்கானா பேரவை தேர்தலில் காங்கிரஸ் சுனாமி ஏற்பட்டுள்ளது: காங். மாநில தலைவர் ஆவேச பேட்டி

திருமலை: தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தெலங்கானாவில் ஆட்சியை கைப்பிடிக்கும் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது, “தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தனது சட்டவிரோத வருமானத்தை வைத்து தேர்தலில் பணத்தை கொடுத்து நிரந்தரமாக ஆட்சியில் நீடிக்கலாம் என்று நினைத்தார். ஆனால் தெலங்கானா மக்கள் யார் வேண்டும் என்பதை தங்கள் வாக்குகளால் நிரூபித்துள்ளனர். காமாரெட்டி தொகுதியில் கேசிஆரை தோற்கடித்து என்னை ஜெயிக்க வைப்பது உறுதியாகி உள்ளது. பிஆர்எஸ் கட்சி 25 இடங்களைக் கூட தாண்டாது. தெலங்கானாவில் காங்கிரஸ் சுனாமி ஏற்பட்டுள்ளது. நான் 3 பதவிகளில் இருந்தாலும், எந்த பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை எங்கள் கட்சிதான் முடிவு செய்யும்” என்றார்.

* கே.சி.ஆர் 3வது முறை முதல்வர் ஆவார்: கே.டி.ஆர் நம்பிக்கை
பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவர் அமைச்சர் கே.டி.ஆர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 2 கே.சி.ஆர். மூன்றாவது முறை முதல்வர் ஆவார். மேலும் வாக்கு செலுத்த வரிசையில் வாக்காளர்கள் உள்ள நிலையில் கருத்துகணிப்பு என்ற பெயரில் வாக்காளர்களை திசை திருப்பினர். எங்களின் மதிப்பீட்டின்படி 70க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.

* 71.17 சதவீதம் வாக்குப்பதிவு
தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் நடந்த பேரவை தேர்தலில் மாநிலம் முழுவதும் 64.26 சதவீதம் வாக்குகள் பதிவானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்த அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்து வந்த தரவுகளை பரிசீலித்த தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் மொத்தம் 71.17 சதவீத வாக்குகள் பதிவானதாக நேற்று அறிவித்தது. இதில் அதிகபட்சமாக யாதாத்திரி போனகிரி மாவட்டத்தில் 90.03 சதவீதமும், குறைந்தபட்சமாக ஐதராபாத்தில் 46.56 சதவீதம் வாக்குப்பதிவானது.

The post பிஆர்எஸ் கட்சி 25 இடங்களை கூட தாண்டாது தெலங்கானா பேரவை தேர்தலில் காங்கிரஸ் சுனாமி ஏற்பட்டுள்ளது: காங். மாநில தலைவர் ஆவேச பேட்டி appeared first on Dinakaran.

Tags : Telangana ,council ,PRS party ,Kang ,Thirumalai ,Telangana Legislature ,Congress ,Congress Party ,Tsunami ,Telangana council ,Head ,Avessa ,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...