×

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

மதுரை: அமலாக்கத்துறை அதிகாரி கைது எதிரொலியாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணை நடத்த விரைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்க ரூ.3 கோடி கேட்டு, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார் என விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.3 கோடி தர மறுத்ததால், இறுதியில் ரூ.51 லட்சம் கண்டிப்பாக தர வேண்டும் எனக்கூற கடந்த மாதம் நத்தம் சாலையில் வைத்து ₹20 லட்சம் பெற்றுள்ளார். நேற்றிரவு மீதமுள்ள ரூ.31 லட்சம் கேட்டு மிரட்டவே, லஞ்ச ஒழிப்புத்துறையில் மருத்துவர் புகாரளித்தார். ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மருத்துவர், அங்கித் திவாரியிடம் கொடுக்க, கொடைரோடு டோல்கேட்டில் அவரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணை நடத்த விரைந்தனர்.

The post மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Anti-Corruption Bureau ,Madurai Enforcement Directorate ,Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது