×

செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் கடை, குடோனில் பதுக்கிய 132 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

புழல்: செங்குன்றம் ஜிஎன்டி சாலை பகுதியில் நேற்று போலீசாரின் அதிரடி சோதனையில், ஒரு டீக்கடையில் இருந்து 77 கிலோ மற்றும் ஒரு குடோனில் இருந்து 55 கிலோ என மொத்தம் 132 கிலோ குட்கா போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குடோன், டீக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை கடத்தி வந்து, பதுக்கி வைத்து, விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இத்தடையை மீறி ஜிஎன்டி சாலை வழியே நாள்தோறும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதைபொருட்களை பலர் கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சின்னஞ்சிறு கடைகளுக்கு சப்ளை செய்து, அவர்கள் மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை தடுக்க போலீசாரும் அடிக்கடி அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்வதுடன், அக்கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.இந்நிலையில், செங்குன்றம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள் மூலமாக குட்கா போதைபொருள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் உள்ள டீக்கடை மற்றும் பெட்டிக் கடைகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.இச்சோதனையில், செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் டீக்கடை நடத்திவந்த ராஜன் (49) என்பவரின் வீட்டில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அவரது வீட்டிலிருந்து 77 கிலோ குட்கா போதைபொருள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், அலமாதியில் உள்ள தனியார் குடோனில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த 55 கிலோ எடையிலான குட்கா போதை பொருள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அங்கு குட்கா மூட்டைகளை பதுக்கி வைத்து சப்ளை செய்து வந்த பிரதாப்சிங் (34), ஜெயபாலன் (41) ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குட்கா போதைபொருளை பதுக்கி விற்பனை செய்த ராஜன், பிரதாப்சிங், ஜெயபாலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 132 கிலோ எடையிலான குட்கா போதைபொருள் மூட்டைகள் மற்றும் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குட்கா பதுக்கி விற்பனை செய்த டீக்கடை, குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் 3 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் கடை, குடோனில் பதுக்கிய 132 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Chenggunram GND road ,Puzhal ,Sengunram GND ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...