×

தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து காசா மீது மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்..!!

காசா: தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து காசா மீது மீண்டும் தாக்குதலைத் இஸ்ரேல் தொடங்கியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதலை நடத்தியது. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழியாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் காசாவில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. தங்கள் வீடுகளை இழந்து லட்சக்கணக்கான மக்கள் காசாவின் தெற்கு பகுதியை நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில், கத்தார், எகிப்து, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வந்தன. அவற்றின் முயற்சியால், கடந்த 24ம் தேதி காலை 7 மணி முதல் 4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

50 பணய கைதிகளாக விடுவிப்பதாக ஹமாஸ், 150 சிறை கைதிகளை விடுவிப்பதாக இஸ்ரேல் அறிவித்தன. முதல் கட்டமாக, 24 பேரை ஹமாஸ் விடுவித்தது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தொடர் முயற்சி காரணமாக ஒரு வார காலத்துக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இந்த ஒரு வார காலத்தில், இஸ்ரேல் தரப்பில் இருந்து கைதிகள் சிலர் விடுவிக்கப்பட, பதிலுக்கு ஹமாஸ் தன்னிடம் இருந்த பிணையக் கைதிகளில் சிலரை விடுவித்தது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான இந்த போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நவ. 24ம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் முடிவடைந்ததால் ஹமாஸ் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸிடம் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுத குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

The post தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து காசா மீது மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்..!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Gaza ,Palestine ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...