×

பிளஸ்2 தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்க தேர்வு நேரலை.. ஒடிசா அரசு அதிரடி முடிவு..!!

புபனேஷ்வர்: ஒடிசாவில் பிளஸ்2 தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்க தேர்வை நேரலை செய்ய ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், நடப்பு ஆண்டில் உயர்நிலைக் கல்வி கவுன்சிலின் (CHSE) 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நேரடியாக ஒளிபரப்ப செய்ய ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, தேர்வு அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்பட உள்ளது. வருடாந்திர தேர்வுகளை நடத்துவதைக் கருத்தில் கொண்டு, 2024ல் வெளிப்படையான முறையில், உயர்நிலைக் கல்வி (CHSE) தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதன்மூலம் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் ஸ்ட்ராங் ரூம் (EMHs), மைய கண்காணிப்பாளர் அலுவலகம், தேர்வு அறைகள் மற்றும் அனைத்து ஆய்வகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை பதிவு செய்வது கட்டாயமாகும். இது தவிர, CHSE, பள்ளி மற்றும் கல்வித் துறை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து, இந்த நிகழ்வுகள் அனைத்தையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும். மேலும், தேர்வு அறை, ஸ்ட்ராங் ரூம், ஆய்வகங்களில் CCTV பொருத்துமாறு உயர்நிலைப் பள்ளி அதிகாரிகளுக்கு CHSE உத்தரவிட்டுள்ளது. கேமரா சோதனை செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

The post பிளஸ்2 தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்க தேர்வு நேரலை.. ஒடிசா அரசு அதிரடி முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Odisha Govt ,Bhubaneswar ,Odisha government ,Odisha ,
× RELATED பழங்குடியினருக்கு எதிரான 48,018 வழக்குகள் ரத்து: ஒடிசா அரசு உத்தரவு