×

நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா?.. ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆளுநருக்கும் முதலமைச்சருக்குமான பிரச்சனைகள் நிறைய உள்ளன. முதலமைச்சரை அழைத்து ஆளுநர் பேசினால்தான் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும். மசோதாக்களுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தை ஆளுநரே தீர்க்க வேண்டும். ஆளுநர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்று தலைமை நீதிபதி காட்டமான கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மசோதாவை நிலுவையில் வைத்ததாக கூறிய பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எம்.பி., எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவருக்கு நிறைய அதிகாரங்கள் உள்ளன. ஆனால் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு அத்தகைய அதிகாரம் இல்லை. மசோதாவை நிலுவையில் வைத்த பின் ஆளுநர் அதை ஒழித்துக்கட்டவோ, மசோதாவை அமலுக்கு வருவதை முற்றிலுமா நிறுத்திவைக்கவோ முடியாது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு டிசம்பர் 11-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா?.. ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Governor ,Ravi ,Chief Minister ,
× RELATED அலோபதி மருத்துவத்துக்கு எதிராக...