×

சாலையோர வியாபாரிகளுக்கு இடையூறு டிஎஸ்பி மீது விசிக புகார் மனு

 

பழநி, டிச.1: கோயில் நகரான பழநிக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதியில் ஏராளமான தற்காலிக கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, கோயில் நிர்வாகம் மற்றும் போலீசாரால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது வழக்கம். இதனால் சிறு மற்றும் குறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, கடந்த ஆண்டுகளில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வியாபாரம் செய்து கொள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் கோயில் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது சாலையோர வியாபாரிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டுவதாகவும், இதனால் ஏழை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறும் விசிகவினர், வெளிமாநில வியாபாரிகளுக்கு மட்டும் வியாபாரம் செய்ய போலீசார் அனுமதிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக நேற்று விசிக நிர்வாகிகள், வியாபாரிகளுடன் பழநி டிஎஸ்பி சரவணன் மீது கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மனு தொடர்பாக விசாரணை செய்வதாக கோட்டாட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

The post சாலையோர வியாபாரிகளுக்கு இடையூறு டிஎஸ்பி மீது விசிக புகார் மனு appeared first on Dinakaran.

Tags : DSP ,Palani ,Ayyappa ,Adiwara ,Dinakaran ,
× RELATED கே.வி.குப்பம் அருகே எருது விடும்...