×

பேரணாம்பட்டில் 55.20 மி.மீ மழை கொட்டியது வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக

வேலூர், டிச.1: வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேரணாம்பட்டில் 55.20 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும், ஒரு சில உள் மாவட்டங்களிலும் மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை முதல் சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. குடியாத்தம், பேரணாம்பட்டு உள்பட ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்தது. நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 227.50 மி.மீ மழை பதிவானது. சாரசரியாக 17.50மி.மீ. அதிகபட்சமாக பேரணாம்பட்டில் 55.20 மி.மீ மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது.

மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): வேலூர் கலெக்டர் அலுவலகம் 3.60, வேலூர் தாலுகா அலுவலகம்-2.20, அம்முண்டி சர்க்கரை ஆலை 9.60, காட்பாடி 2.50, பொன்னை 9.20, விரிஞ்சிபுரம் 40, ராஜாதோப்பு அணை- 20, மோர்தானா அணை 18, மேலாலத்தூர் 30.20, குடியாத்தம் 37.

The post பேரணாம்பட்டில் 55.20 மி.மீ மழை கொட்டியது வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Peranambhat ,Vellore ,Peranambad ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் எலும்புக்கூடான நிலையில் ஆண் சடலம் மீட்பு