×

மின் பளுவை குறைக்க சங்கரன்கோவில் தொகுதியில் புதிய துணை மின் நிலையங்கள் ராஜா எம்எல்ஏ கோரிக்கை

சங்கரன்கோவில். டிச.1: மின்பளுவை குறைக்கும் விதமாக சங்கரன்கோவில் தொகுதியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரனுக்கு ராஜா எம்எல்ஏ மனு அனுப்பியுள்ளார். மனு விவரம்: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தொழில் மற்றும் விவசாயம் ஆகியவற்றால் வளர்ந்து வரும் பகுதியாகும் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் வணிக நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில், வீரசிகாமணி மற்றும் புளியங்குடி துணை மின்நிலையங்களின் மின்பளுவை குறைக்கும் விதமாக புதிய 33/11கிலோ வாட் துணை மின்நிலையம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இருமன்குளம், வடக்கு புதூர், தெற்கு புதூர், கேவி ஆலங்குளம், நொச்சிகுளம் மற்றும் தேவைப்படும் இடங்களில் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய துணை மின் நிலையம் அமைத்து தடை இல்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post மின் பளுவை குறைக்க சங்கரன்கோவில் தொகுதியில் புதிய துணை மின் நிலையங்கள் ராஜா எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Raja ,MLA ,Sankarankovil ,Sankaran ,Tenkasi ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின்...