×

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தஞ்சாவூரில் குறைந்த வாடகையில் அனைத்து வசதிகளுடன் தோழி விடுதி

தஞ்சாவூர் டிச.1: தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு ஜூலை 13ம் தேதி முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டை ரோடு மேலவஸ்தாசாவடி தெற்குத்தெரு என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி பல்வேறு ஊர்கள், மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிபவர்கள். பயிற்சிக்காக வருபவர்கள், பணிநிமித்தமாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்கும் மகளிர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு முயற்சி ஆகும். தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதி கார்ப்பரேஷன் லிமிடெட் சிறந்த சேவைகளைத் தரும் இந்த விடுதிக்கு \”தோழி\” என்று பெயரிடப்பட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டை ரோடு, மேலவஸ்தாச்சாவடி, தெற்குத்தெரு என்ற இடத்தில் 13.7.2023 அன்று முதல் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 60 படுக்கைகள் கொண்ட படுக்கை அறைகள் உள்ளது. மேலும் தங்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் பணிபுரியும் பெண் விடுதி மேலாளர் மற்றும் 24 மணி நேரமும் பணிபுரியும் 2 பாதுகாப்பு காவலர், 24 மணி நேரமும் இயங்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பயோமெட்ரிக் உள்நுழைவு வசதி உள்ளது.

மேலும் விடுதியில் சுத்தமான குடிநீர் வசதி (ஆர்ஓ வாட்டர்), அயனிங் வசதி, துணி துவைப்பதற்கு வாஷிங்மெஷின் வசதி உள்ளது. மழை காலங்களில் பெண்களுக்கு ஏதுவாக குளிப்பதற்கு கெய்சர் வசதி (வாட்டர் ஹீட்டர்) 24 மணி நேரமும் இலவச வை-பை வசதி, பார்க்கிங் வசதி, அறைகளை சுத்தம் செய்யவும், சுகாதாரமான கழிப்பறை வசதிகளை பராமரிக்கவும் 2 பெண் பணியாளர்கள் உள்ளனர். மேலும் சுகாதாரமான காற்றோட்ட வசதி உள்ளது. இவை அனைத்தும் மிக குறைந்த வாடகையில் கிடைக்கிறது. விடுதியில் 2 பேர் தங்கும் வசதி, 4 பேர் தங்கும் வசதி உள்ளது. 2 பேர் தங்கும் வசதி கொண்ட படுக்கை அறை ரூ.3,500க்கும், 4 பேர் தங்கும் வசதி கொண்ட அறை ரூ.2,500க்கும் என குறைந்த வாடகையில் அமைந்துள்ளது.

இது விடுதி போன்று இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கான இல்லமாக செயல்படுகிறது. விடுதியில் தங்கும் சேவையைப்பெற பயனர்கள் www.tnwwhcl.in < http://www.tnwwhcl.in/ > என்ற ஒருங்கிணைந்த இணையதளத்தின் மூலம் தங்கள் விவரங்களை உள்ளிடலாம் என தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

The post வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தஞ்சாவூரில் குறைந்த வாடகையில் அனைத்து வசதிகளுடன் தோழி விடுதி appeared first on Dinakaran.

Tags : Doshi ,Thanjavur ,Tamil Nadu Working Women's Hostel Corporation Limited ,Tamil Nadu government ,
× RELATED கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!