×

பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்

பொன்னமராவதி,டிச.1: பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் பொதுமருத்துவ முகாம் நடந்தது. பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி ஊராட்சியில் பொன்னமராவதி துர்கா மருத்துவமனை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து பொதுமக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. வேகுபட்டி ஊராட்சி மன்றமும் பொன்னமராவதி துர்கா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் கட்டணமில்லா லவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சுணன் தலைமை வகித்தார்.

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து ஊராட்சி செயலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொது மக்களுக்கு பொது மருத்துவ பரிசோதனை, ரத்த பரிசோதனை, இசிஜி, சர்க்கரை அளவு, ரத்தத்தில் கொழுப்பு அளவு, ரத்த சோகை பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும், இலவசமாக பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் நடைபெற்ற இந்த முகாமிற்கு மருத்துவர் ரஜினி சதனிஸ் செல்வக்குமார் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரை வழங்கினர். இதில் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Vegupatti ,Ponnamaravati ,Ponnamaravati Durga Hospital ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...