பாடாலூர், டிச.1: ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் மாற்றுத் திறனாளிகளின் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்காக சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. ஆலத்தூர் தாசில்தார் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய படிவங்களை வாங்கி சென்றனர்.
முகாமில் தேர்தல் துணை தாசில்தார் செந்தில்முருகன், மாற்றுத் திறனாளிகளுக்கான முட நீக்கியல் அலுவலர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.