×

மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு மழை பாதிப்பு குறித்து புகார் வந்தால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு பல்லாவரம் எம்எல்ஏ அறிவுரை

தாம்பரம்: மூவரசம்பேட்டை ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் தொடர் மழையால், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்கட்டளை கணேஷ் நகர், பிருந்தாவனம் நகர், பெரிய தெரு, பாலாஜி நகர், காந்தி தெரு, பிருந்தாவன் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுபற்றி அறிந்த பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் அதிகாரிகளுடன் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக சாலைகளில் தேங்கியிருந்த மழைநீரை ராட்சத மின் மோட்டார்களை கொண்டு உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

பின்னர், மழையில் மரங்கள் முறிந்து விழாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், காவாய்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக சரிசெய்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு மழை நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தேவையான போர்க்கால நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும், மழை பாதிப்பு குறித்து புகார்கள் வந்தால் உடனுக்குடன் சரி செய்வதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும், என்றார்.

The post மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு மழை பாதிப்பு குறித்து புகார் வந்தால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு பல்லாவரம் எம்எல்ஏ அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Pallavaram MLA ,Tambaram ,Muvarasampet ,Pallavaram Assembly Constituency ,
× RELATED தாம்பரத்தில் சிக்னல் மேம்பாட்டு...