×

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழை பாதிப்புகளை தடுக்க தேசிய பேரிடர் மீட்பு குழு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் ஆண்டுதோறும் மழை காலத்தின்போது சாலை, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மழை காலத்திற்கு முன்பே தாம்பரம் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.

இதனால், தற்போது பெய்து வரும் மழைக்கு சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றாலும் உடனுக்குடன் அவற்றை வெளியேற்றி பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாதபடி தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து அதிகப்படியான மழை பெய்து வருவதால், மழை பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்கும் பாதிப்புகளில் சிக்கும் பொதுமக்களை மீட்பதற்கும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்த வருகின்றனர்.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதீப் என்பவர் தலைமையில், 25 தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நேற்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா வரவேற்று, பின்னர் தாம்பரம் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளார். அங்கே தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழை பாதிப்புகளை தடுக்க தேசிய பேரிடர் மீட்பு குழு appeared first on Dinakaran.

Tags : National Disaster Response Team ,Tambaram Municipal Corporation ,Tambaram ,Tambaram Corporation ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில்...