×

பெரியபாளையம் அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நின்ற மழைநீர் அகற்றம்

ஊத்துக்கோட்டை: தினகரன் செய்தி எதிரொலியால் பெரியபாளையம் அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நின்ற மழைநீர் அகற்றப்பட்டது. பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியபாளையம், தண்டுமாநகர், ராள்ளபாடி, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், வேலப்பாக்கம், வடமதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6 முதல் 12 வகுப்பு வரை 950 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 23ம் தேதி பெரியபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தேங்கிய மழைநீரில் நடந்து பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் பெரியபாளையம் பகுதியில் மழை பெய்ததால் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையறிந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆத்துப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் இணைந்து பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றினர்.

The post பெரியபாளையம் அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நின்ற மழைநீர் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam Government School ,Oothukottai ,Dinakaran ,Periyapalayam Panchayat ,
× RELATED ஊத்துக்கோட்டை பகுதியில் மண் பானை செய்யும் பணி தீவிரம்