×

பூந்தமல்லி நகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் பணியாளர்கள் ஓய்வறை, பொதுகழிப்பிடம், பூங்காக்கள்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார்

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஓய்வறை, பூங்காக்களை கிருஷ்ணசாமி எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட நாலாவது வார்டு சித்தா அவென்யூ பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது அதேபோல் 12வது வார்டு சுந்தர் நகரில் ரூ.7 லட்சம் மதிப்பில் பூங்கா சீரமைக்கப்பட்டுள்ளது. 14வது வார்டு பகுதியில் ரூ.16.5 மதிப்பில் தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் இலவச பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இதற்கு பூந்தமல்லி நகர மன்ற தலைவர் காஞ்சனாசுதாகர் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா, பூந்தமல்லி நகர செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிகளில் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டிடங்களையும், பூங்காக்களையும் திறந்து வைத்தார். இதில் பூந்தமல்லி நகர் மன்ற உறுப்பினர்கள், நகர திமுக நிர்வாகிகள் துரைபாஸ்கர், அப்பர்ஸ்டாலின், டில்லிராணி மலர்மன்னன், அசோக்குமார், சுதாகர், புண்ணியகோட்டி, அன்பழகன், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லி நகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் பணியாளர்கள் ஓய்வறை, பொதுகழிப்பிடம், பூங்காக்கள்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Krishnaswamy ,MLA ,Poontamalli ,
× RELATED அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி