×

போதையில் மாணவர்கள் ரகளை மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் பள்ளியில், மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 4 பேர் மதுபோதையில் பள்ளிக்கு வந்து, வகுப்பறைகளில் பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை தகாத சொற்களால் திட்டியும், பாடம் நடத்த விடாமல் தடுத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. பேரங்கியூரில் பள்ளிக்கூடத்திற்கு மிக அருகிலேயே மதுக்கடை செயல்பட்டு வருவது தான் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி ரகளையில் ஈடுபட்டதற்கு காரணம். எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post போதையில் மாணவர்கள் ரகளை மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,BAMAK ,Ramadas ,Barangyur School of ,Villupuram ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...