×

மளிகை கடையில் பாம்பு பிடிபட்டது

ஆவடி: ஆவடியை அடுத்து அண்ணனூர், செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார்(37). இவர், மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையில் சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருந்ததால், அந்த மழைநீரில் 5.5 அடி நீளமுள்ள இந்திய அரிய வகை நல்ல பாம்பு ஒன்று கடையின் முகப்பில் உள்ள தடுப்பு கம்பியில் நுழைந்து இருந்தது. இதை கண்டு, அதிர்ச்சி அடைந்த சுரேஷ் குமார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவன இயக்குனர் ரீகன் மற்றும் அவர் தலைமையிலான குழுவினர், 2 மணி நேரம் போராடி பாம்பை பத்திரமாக மீட்டு, வெங்கல் காட்டு பகுதியில் விட்டனர்.

The post மளிகை கடையில் பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Suresh Kumar ,Annanur ,Senthil Nagar ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை...