×

2024ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடருக்கான 20 அணிகள் கொண்ட பட்டியலை வெளியிட்டது ஐசிசி!

துபாய்: இந்நிலையில் அடுத்த ஆண்டு அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான 20 அணிகள் கொண்ட பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் இடம் பெற்றுள்ளன.

2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க்கும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக இதுவரை 12 அணிகள் முன்னேறி உள்ளன. மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன.

நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிகா, நெதர்லாந்து அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மேலும் ஐசிசி தரவரிசை அடிப்படையில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் தொடரை நடத்துவதால் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள 20 அணிகளும் ஒரு குரூப்பிற்கு 5 அணிகள் வீதம் 4 குழுவாக பிரிக்கப்பட உள்ளன. அந்த குரூப்பில் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு குருப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளூம் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு அந்த சூப்பர் 8 சுற்றில் மோத வேண்டும். சூப்பர் 8 சுற்றின் முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 தொடருக்கான 20 அணிகள் கொண்ட பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம்
கனடா, நேபாளம், ஓமன், பப்புவா நியூ கினி, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, உகாண்டா ஆகிய அணிகள் அடங்கியுள்ளன.

The post 2024ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடருக்கான 20 அணிகள் கொண்ட பட்டியலை வெளியிட்டது ஐசிசி! appeared first on Dinakaran.

Tags : ICC ,T20 World Cup Series ,Dubai ,US ,West Indies ,T20 World Cup series for 2024 ,Dinakaran ,
× RELATED ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான...