×

5 மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது!

டெல்லி: 5 மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக ஆட்சியை காங்கிரஸ் பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் கட்சி முந்துவதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் தகவல் வெளியாகியுள்ளது. மிசோரமில் 15 முதல் 25 தொகுதிகளைக் கைப்பற்றி சோரா மக்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும் எனவும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு எனவும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மினி நாடாளுமன்ற தேர்தல் என்று அழைக்கப்படும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளன. அதன்படி, சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு கடந்த 7 மற்றும் 17ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுமுடிந்தன.

அதேபோல் மிசோரம் மாநிலத்தில் கடந்த 27ம் தேதியும், மத்திய பிரதேசத் தில் 17ம் தேதியும், ராஜஸ் தானில் 25ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல் தெலங்கானா மாநிலத்தில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்தது. மிசோரமில் 80.66 சதவீதமும், சட்டீஸ்கரில் 76.31 சதவிதமும், மத்தியபிரதேசத்தில் 77.15 சதவீதமும், ராஜஸ்தானில் 25.45 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

5 மாநிலத்தில் பதிவான வாக்குகள் வருகிற 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் 5 மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

*ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக ஆட்சியை காங்கிரஸ் பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏபிபி நியூஸ் சி-வோட்டர் வாக்குக் கணிப்பில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் 41-53 இடங்கள் பாஜக 36-48 இடங்கள் கிடைக்கும் எனவும் இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா வாக்கு கணிப்புப்படி சத்தீஸ்கரில் காங்.குக்கு 40-50, பாஜகவுக்கு 36 46 வரை கிடைக்க வாய்ப்பு எனவும் இந்தியா டிவி-சி.என்.எக்ஸ். வாக்குக்கணிப்பின்படி சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு 46-56, பாஜகவுக்கு 30-40 கிடைக்க வாய்ப்பு எனவும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

* சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் தகவல் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு 42-53, பாஜகவுக்கு 34-45, இதர கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்கலாம் என ஜன் கீ பாத் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

*மிசோரமில் 15 முதல் 25 தொகுதிகளைக் கைப்பற்றி சோரா மக்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது. மிசோ தேசிய முன்னணி 10 முதல் 14 இடங்களை பிடிக்கும் என ஜன் கி பாத் கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது. மிசோரமில் காங்கிரஸ் கட்சி 5 முதல் 9 இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிசோரமில் பாஜக 0-2 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளதாக ஜன் கி பாத் கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது. மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று இந்தியா டிவி சி.என்.எக்ஸ் கணித்துள்ளது. மிசோ தேசிய முன்னணி 14-18, சோரா மக்கள் கட்சி 12-16, காங்கிரஸ் 8 10, பாஜக 0-2 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

* மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் கட்சி முந்துவதாக வாக்குப் பதிவுக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் சில கணிப்புகளில் காங்கிரஸ் முந்துகிறது, ஓரிரு கணிப்புகளில் இழுபறி நிலை நீடிப்பதாக தகவல் வெளியாகியுளளது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு 102-125, பாஜகவுக்கு 100-123, பிற கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைக்கலாம்-ஜன் கி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு 111-121, பாஜகவுக்கு 106-116, பிற கட்சிகளுக்கு 6 இடங்கள் கிடைக்கலாம் டிவி 9 கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 118-130, காங்கிரசுக்கு 97-107 இடங்கள் கிடைக்கும் என ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

*ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு என வாக்குப்பதிவுக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் பாஜகவுக்கு 100-110, காங்கிரசுக்கு 90-100 இடங்களும் கிடைக்கலாம் என டிவி 9 பாரத்வர்ஷ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் பாஜகவுக்கு 100-122, காங்கிரசுக்கு 62-85, மற்ற கட்சிகளுக்கு 14 15 இடங்கள் கிடைக்கலாம் ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரசுக்கு 56-72, பாஜகவுக்கு 108-128, பிற கட்சிகள் 13 21 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் ETG கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் பாஜக 105-125, காங்கிரஸ் 69-91, பிற கட்சிகள் 5 15 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு என பி-மார்க் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

The post 5 மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Telangana ,Andhra ,Dinakaran ,
× RELATED அமித் ஷா வீடியோ விவகாரம்: தெலங்கானா...