×

நெய் பலன்கள்

நன்றி குங்குமம் தோழி

* இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய்யை ஒரு கப் சூடான பாலில் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும். இதில் இருக்கும் பியூட்டிரிக் அமிலம் குடலை சுத்தம் செய்து செரிமானத்திற்கு வழி வகுக்கும்.

* மூக்கடைப்பு பிரச்னையால் மூச்சுவிடவே சிரமமாக இருக்கும் வேளையில், காலை எழுந்ததும் நெய்யை சிறிது எடுத்து லேசாக சூடுபடுத்தி அடைத்துக் கொண்டிருக்கும் மூக்கில் சில துளிகள் விட உடனடியாக மூக்கடைப்பு நீங்கும். அதோடு இவை தொண்டையில் இறங்கி சளிக்கு காரணமான தொற்றையும் நீக்கும்.

* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் உணவில் அல்லது சப்பாத்தியில் சிறிது நெய் கலந்து சாப்பிட உடலில் சேரும் மாவுச்சத்து குறையும்.

* ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யுடன், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கலந்து தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசினால், தலைமுடி மென்மையாகும். பொடுகு பிரச்னைக்கு நெய்யுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

கால் வலி குணமாக…

* ஆலமரத்தில் இருந்து வெளியாகும் பாலை பாத வெடிப்பில் தடவினால், கால் மென்மையாகி விடும்.

* குழந்தை கீழே விழுந்து கால் வீங்கிவிட்டால் கொஞ்சம் மண்ணெண்ணெயை தடவினால் வீக்கம் போய்விடும்.

* குதிகால், முழங்கை காய்ப்பு ஏற்பட்டு கருத்துப்போனால் அந்த இடத்தில் எலுமிச்சை சாற்றை தேய்க்கலாம்.

* இளஞ்சூடான நீரில் தினமும் காலை, மாலையில் 10 நிமிடம் நின்றால் கால்வலி போய்விடும்.

* பிளாஸ்டிக் செருப்பு வாங்கியதும் தண்ணீரில் ஊறவைத்தால், காலை கடிக்காமல் உழைக்கும்.

* வில்வக் காய்களை ஓடு நீக்கி அரைத்து நல்லெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைத்து தினமும் தடவினால் குதிகால் வலி நீங்கும்.

* காலில் முள் குத்திய இடத்தில் வலி ஏற்பட்டால், வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அனலில் காட்டி சூட்டோடு வலிக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

* கீழாநெல்லி இலையைப் பறித்து சிறிது நல்லெண்ணெயை சேர்த்து, அரைத்து இரவு தூங்கப்போகு முன் சொத்தை பட்ட நகங்களில் தடவ குணமாகும்.

கோலம் பளிச்சிட…

* புள்ளி வைக்காமல் ரங்கோலி வரையும்போது சாக்பீஸ் கொண்டு வரைந்து பிறகு கலரால் அலங்கரித்தால் கலையாமல் அழகாக இருக்கும். பஞ்சு, காபி வடிகட்டி, மெல்லிய துணி கொண்டு கலர் பொடி தூவினால், கோலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறம் படியும்.

* கலர் பொடியைத் தூவி முடித்த பிறகு கடைசியாக வெள்ளைக் கோல மாவைப் பட்டையாக பார்டர் தீட்டினால் கோலம் தெளிவாகத் தெரியும்.

* கோல மாவுடன் அரிசி மாவை சமஅளவு கலந்தால், கோலம் பிசிறாமல் வரும்.

* மணலை மெல்லிய கண் உள்ள சல்லடையில் சலித்து அதனுடன் கலர் கோலமாவைச் சேர்த்து கோலமிட்டால் சீராகப் பரவும்.

* கல் உப்பு, கரும்பின் சக்கைப்பொடி, உலர்ந்த தேங்காய்ப்பூ, மரத்தூள், டீத்தூள் இவைகளுடன் கலர்பொடி கலந்து தூவ எந்தவிதமான கோலமும் பளிச்சென்று எடுப்பாகத் தெரியும்.

– இந்திராணி தங்கவேல், சென்னை.

The post நெய் பலன்கள் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...