×

விஜயகாந்த் விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!

சென்னை: விஜயகாந்த் விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று குறிப்பிட்டது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post விஜயகாந்த் விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Edappadi Palanisami ,Chennai ,H.E. Secretary General ,
× RELATED தனிப்பட்ட முறையில் எடப்பாடி...