×

வானில் திரண்ட மேக கூட்டம்

புதுக்கோட்டை, நவ.30: புதுக்கோட்டையில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் அரையாண்டு தேர்வில் 10,12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், காலாண்டுத்தேர்வில் 10, 12ம் வகுப்புகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளின் தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து தலைமையாசிரியர்கள், விடுதிக்காப்பாளர் களுக்கான மீளாய்வு கூட்டம் கலெக்டர் மெர்சிரம்யா தலைமையில் நேற்று நடைபெற்றது.

பின்னர் மாவட்ட கலெக்்டர் தெரிவித்ததாவது;
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலாண்டுத் தேர்வில் 10, 12ம் வகுப்புகளில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தேர்ச்சி சதவீதம் குறைந்த தலா 1 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி வீதம் 13 ஒன்றியங்களை சேர்ந்த தலைமையாசிரியர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் விடுதிகளின் காப்பாளர்கள் ஆகியோருக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் காலாண்டுத் தேர்வில் 10, 12ம் வகுப்புகளில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணம், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணம் ஆகியவற்றை தலைமையாசிரியர்கள், விடுதி காப்பாளர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் மாணவர்களின் 100 சதவீத தேர்ச்சி மற்றும் சராசரி மதிப்பெண் உயர்த்த தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி சதவீதம் குறைந்த ஒவ்வொரு பாடத்திலும் சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர்கள் வழிகாட்டிட வேண்டும். மேலும் காலை, மாலை சிறப்பு வகுப்பு வாயிலாக தனிக்கவனம் செலுத்திட வேண்டும். விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் முறையாக வகுப்புகளுக்கு வருவதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதில் விடுதிக்காப்பாளர்கள் கவனம் செலுத்திட வேண்டும். இடைநின்ற மாணவர்கள் எவரும் இல்லாத வகையில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக பெறப்பட்டுள்ள பள்ளி அடிப்படை கட்டமைப்பு தேவை சார்ந்தவை தேவையின் அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்றப்படும். பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக வருகை புரிந்திராத மாணவிகள் பற்றிய விபரங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தற்போது மழைக்காலமாதலால் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அது குறித்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ, மருத்துவமனைக்கோ உடனடியாக அழைத்துச்செல்ல வேண்டும். மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள் ஏதேனும் இருந்தால் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கோ, பொதுப்பணித்துறைக்கோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு அருகில் மாணவர்கள் செல்ல அனுமதிக்கமால் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும்.

அரையாண்டுத் தேர்வில் அனைத்து மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.மஞ்சுளா, மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, மாரிமுத்து, இளையராஜா, தலைமையாசிரியர்கள், விடுதிகளின் காப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post வானில் திரண்ட மேக கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...