×

தன்னிறைவு பெற்ற 64 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: டிச.5ம் தேதி நடக்கிறது

கரூர், நவ. 30: கரூர் மாவட்டத்தில் தன்னிறைவு பெற்ற 64 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் வரும் 5ம் தேதி நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரூர் கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற 64 உயரும் கிராம ஊராட்சிகளில் டிசம்பர் 5ம்தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.

கரூர் மாவட்டத்தில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற 64 உயரும் கிராம ஊராட்சிகளில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற மற்றும் பார்வைக்கு தூய்மையாக விளங்கும் கிராம ஊராட்சிகளை முன்மாதிரி கிராமம் ஆக அறிவிப்பு செய்ய வேண்டும் என்ற விவாதப் பொருளை கொண்டு டிசம்பர் 5ம்தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, சம்பந்தப்படட ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் டிசம்பர் 5ம்தேதி நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தன்னிறைவு பெற்ற 64 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: டிச.5ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Gram sabha ,Karur ,
× RELATED அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்,...