×

‘ஜன.21ல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்’

ஈரோடு: தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறுகையில், ‘உலக அளவில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை. தமிழ்நாட்டில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளுக்கான தடை தொடர்ந்து கொண்டுள்ளது.

கள் உணவின் ஒரு பகுதி. கள் இறக்குவதற்கும், பருகுவதற்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமைகளில் ஒன்றாகும். கள்ளில் கலப்படம் செய்யப்படுகிறது என்ற ஒற்றை காரணத்திற்காக அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. வருகின்ற ஜனவரி 21ம் தேதி திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். ’ என்றார்.

The post ‘ஜன.21ல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்’ appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu ,Nallasamy ,Dinakaran ,
× RELATED கடும் வெயில் பாதிப்பை கட்டுப்படுத்த முன்னேற்பாடு குறித்து ஆய்வு கூட்டம்