×

சிறையில் சரக்கடித்த ஏட்டு சஸ்பெண்ட்

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை அரசினர் தோட்டத்தில் கிளை சிறை உள்ளது. இங்கு சிறைக்காவலர்கள் ஓய்வெடுக்க காத்திருப்பு அறையில் ஒருவர் மது அருந்துவது போன்ற வீடியோ வைரல் ஆனது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் மது அருந்தியவர் வாணியம்பாடி கிளைச்சிறையில் பணியாற்றும் தலைமை சிறைக்காவலர் ஜெயகுமார் என ெதரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் நேற்று உத்தரவிட்டார்.

The post சிறையில் சரக்கடித்த ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tirupathur District ,Vaniyampadi Kacheri Road Government Estate ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள்