×

திருவள்ளூர், பெரும்பாக்கத்தில்  கிருஷ்ணர் பஜனை கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர், நவ. 30: திருவள்ளூர் நகராட்சி, பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பாமா ருக்மணி சமேத,  கிருஷ்ணர் பஜனை திருக்கோயில். பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் நேற்று 28ம் தேதி மாலை 4.30 மணிக்கு புதிய படம் கரிகோலம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு அனுக்ஞை ஆச்சார்யவரணம் பகவத் பிரார்த்தனை சங்கல்பம் புண்யாஹவாசனம், அங்குரார்பணம், வாஸ்து சாந்தி ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், பிரதான ஹோமம், கும்ப ஆராதனம், கோ பூஜை, புதிய படம் விமான பிம்மபங்களுக்கு நேத்ரோண்கினம், மஹா சாந்தி, திருமஞ்சனம், ரக் ஷா பந்தனம், சயனாதி வாசம், பூர்ணாஹூதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு மேல் விஸ்வரூபம், புண்யாஹவாசனம் மற்றும் கும்ப ஆராதனம் ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது. 9.45 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, யாத்ராதன சங்கலபம் மற்றும் கும்பம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து 10.15 மணிக்கு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரால் கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மஹா நெய்வேத்யம், வேத சாற்று முறை, மஹத் ஆசிர்வாதம், பிரபந்த சாற்று முறையும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது. யாகசாலை ஆகம் மற்றும் யாகசாலை சர்வசாதகம் நிகழ்ச்சியை கனகம்மாசத்திரம் ஏ.எஸ்.பார்த்தசாரதி மற்றும் ஸ்தபதி முத்து ஆகியோர் செய்தனர். தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் திருவள்ளூர், பெரும்பாக்கம், பெரியகுப்பம், மணவாளநகர், புல்லரம்பாக்கம், பூண்டி, ஈக்காடு, காக்களூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து ஸ்ரீ பாமா ருக்மணி ருக்மணி சமேத  கிருஷ்ணரின் அருளை பெற்றனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு 7 மணியளவில் ஸ்ரீ பாமா ருக்மணி ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணரின் படம் திருவீதி உலா நடைபெற உள்ளது. இந்த மஹா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பெரும்பாக்கம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post திருவள்ளூர், பெரும்பாக்கத்தில்  கிருஷ்ணர் பஜனை கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur, Perumbakkam ,Krishna Bhajanai Temple Kumbabhishekam ,Thiruvallur ,Sri ,Bama ,Rukmani Sametha ,Krishna ,Bhajanai ,Perumbakkam, Thiruvallur Municipality… ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்