×

புதுவை முழுவதும் முககவசம் கட்டாயம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி, நவ. 30: புதுவை முழுவதும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டது. மேலும் மருத்துவமனைக்குள் முககவசம் அணியாமல் வந்த நோயாளிகளுக்கு பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். புதுச்சேரி முழுவதும் காய்ச்சலால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இன்புளுன்சா காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை மாநில சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது. முதல்கட்டமாக இன்புளுன்சா காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு பொதுஇடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி நேற்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்து வருமாறு நேற்று அறிவுறுத்தப்பட்டனர்.

நுழைவு வாயிலில் நின்ற பணியாளர்கள் முககவசம் அணியாமல் வந்த நோயாளிகளை தடுத்து நிறுத்தி முககவசம் அணிந்து உள்ளே செல்லுமாறு கூறினர். முககவசம் அணியாமல் வந்தவர்களை அடுத்துவரும்போது கண்டிப்பாக அணிந்து வரவேண்டுமெனவும், இல்லாவிடில் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்தனர். இதேபோல் பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வருவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறைகளின் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

The post புதுவை முழுவதும் முககவசம் கட்டாயம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Dinakaran ,
× RELATED புதுவை பெண்ணிடம் ₹1.28 லட்சம் மோசடி