×

டிராவல்ஸ் ஓனரை தாக்கிய ரவுடி கைது

மதுரை, நவ. 30: மதுரை வடக்கு மாசி வீதி, கருவேப்பிலைக்கார தெருவை சேர்ந்தவர் பேய் மணிகண்டன் (31). அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் கடந்த நவ.27ம் தேதி இரவு தனது டிராவல்ஸ் அலுவலகத்தில் இருந்த போது அங்கு விளாச்சேரி, மொட்டமலையை சேர்ந்த ரவுடி சியான் சேது (29) என்பவர் குடிபோதையில் வந்து தகராறு செய்துள்ளார். அதை பேய் மணிகண்டன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சியான் சேது டிராவல்ஸ் அலுவலகத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததுடன், பேய் மணிகண்டனை தாக்கி கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்த புகாரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிந்து சியான் சேதுவை கைது செய்தனர்.

The post டிராவல்ஸ் ஓனரை தாக்கிய ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Bei Manikandan ,Karuvepilaikara Street, Madurai North Masi Road ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி