×

பழநி அருகே பாசனத்திற்காக பாலாறு – பொருந்தலாறு அணையில் நீர் திறப்பு அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு

பழநி, நவ. 30: பழநி அருகே அமைந்துள்ள பாலாறு – பொருந்தலாறு அணையில் இருந்து, பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டார்.
பழநி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழநி பகுதிகளின் விவசாயம் மற்றும் குடிநீருக்கு ஆதாரமான அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பழநி பகுதியில் விவசாய பணிகள் துவங்கி உள்ளன. விவசாயிகள் உழவு மற்றும் நடவுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 65 அடி உயரமுள்ள பாலாறு – பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டி உள்ளது.

பழைய 6 அணைக்கட்டு கால்வாய்கள் மூலம் பாசன வசதிக்காக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தண்ணீரை திறந்து வைத்தார். ,இதையடுத்து அணையில் இருந்து வரும் மார்ச் 28ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன்மூலம் பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், அ.கலையம்புத்தூர், மானூர், கோரிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 6 ஆயிரத்து 168 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சௌந்திரபாண்டியன், சுவாமிநாதன், சுப்பிரமணியன், பேரூர் செயலாளர் சோ.காளிமுத்து மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர் நாகராஜ், கோட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பழநி அருகே பாசனத்திற்காக பாலாறு – பொருந்தலாறு அணையில் நீர் திறப்பு அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Palaru-Phalalar Dam ,Palani ,Minister ,Ar.Chakkarapani. ,A. Chakrapani ,Dinakaran ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்