நெல்லை, நவ. 30: நெல்லை மாவட்டத்தில் இல்லம் தோறும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடங்கியது. இதற்கான பணியில் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதல்வரின் கொள்கையான ஒரே ஒருவருக்கு மட்டும் நன்மை பயக்கும் எனினும் அந்தச் செயலை நாம் உடனே செய்தாக வேண்டும் என்பதன் செயல்பாடே மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு ஆகும். இதற்காக மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் தரவுகள் கணக்கெடுப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் கடந்த 23ம் தேதி துவக்கி வைத்தார். இதைத் தொடரந்து மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு பணி இல்லங்கள் தோறும் நேற்று (29ம் தேதி) முதல் தொடங்கியது. இதற்கான பணியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மாவட்டம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே கணக்கெடுப்பாளர்களிடம் மாற்றுத்திறனாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் உரிய தகவல்களை தெரிவித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post இல்லம் தோறும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு கலெக்டர் கார்த்திகேயன் தகவல் appeared first on Dinakaran.
