×

தெற்கு ஆசியாவில் முதன்முறையாக தன்பாலின திருமணத்திற்கு நேபாளம் சட்ட அனுமதி

காத்மாண்டு: நேபாள நாட்டில் கடந்த 2007ம் ஆண்டு தன்பாலின திருமணத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து 2015ல் நேபாள அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி திருநங்கை மாயா குருங் உள்பட பலர் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிமன்றம் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க இடைக்கால தடை விதித்தது. இதனால் நவல்பரசி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை மாயா குருங் மற்றும் ஓரினச்சேர்கையாளர் சுரேந்திர பாண்டே திருமண விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இருப்பினும் குடும்பத்தினர் அனுமதியுடன் அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர். நேபாள உச்ச நீதிமன்றம் அவர்கள் மனுவை விசாரித்து வந்தது. தற்போது அவர்கள் திருமணத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனால் தெற்கு ஆசியாவில் முதன்முறையாக தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கிய நாடு என்ற பெயரை நேபாளம் பெற்றுள்ளது.

The post தெற்கு ஆசியாவில் முதன்முறையாக தன்பாலின திருமணத்திற்கு நேபாளம் சட்ட அனுமதி appeared first on Dinakaran.

Tags : Nepal ,South Asia ,Kathmandu ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…