×

சீக்கிய தீவிரவாதியை கொல்ல இந்தியா சதியா அமெரிக்கா புகார் குறித்து விசாரிக்க உயர் மட்ட குழு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள சீக்கிய தீவிரவாதியை கொல்ல இந்தியா சதி செய்ததாக அந்த நாடு அளித்த புகார் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய வெளியுறவு துறை செயலாளர் அரிந்தம் பாக்ஷி தெரிவித்தார். கனடாவின் வான்கூவரில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் கொலையில் ஒன்றிய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டினார்.

இதே போல்அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய தீவிரவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது பல்வேறு தீவிரவாத வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய நடந்த முயற்சியை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து விட்டதாகவும், கொலை சதிக்கான தொடர்பில் ஒன்றிய அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில்,ஒன்றிய வெளியுறவு செயலாளர் அரிந்தம் பக்ஷி நேற்று கூறுகையில்,‘‘ அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையின்போது, கிரிமினல் கும்பல்கள்,துப்பாக்கி கடத்தல்காரர்கள்,தீவிரவாதிகள் மற்றும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக அமெரிக்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. தேச பாதுகாப்பு தொடர்புடைய இது போன்ற சம்பவங்களை இந்தியா தீவிரமாக எடுத்து கொள்ளும். .குர்பத்வந்த் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி குறித்து விசாரிக்க உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.

The post சீக்கிய தீவிரவாதியை கொல்ல இந்தியா சதியா அமெரிக்கா புகார் குறித்து விசாரிக்க உயர் மட்ட குழு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : US ,India ,Union govt ,Delhi ,United States ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...