×

கேரள மாநிலத்தில் ஒரே சாலைக்கு 2 திறப்பு விழா: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ, ராகுல் காந்தி திறந்து வைத்தனர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே ராகுல் காந்தி நேற்று மாலை திறக்க இருந்த ரோட்டை சிபிஎம் எம்எல்ஏ ஒரு நாள் முன்பே திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று இதே சாலையை ராகுல் காந்தி மீண்டும் திறந்து வைத்தார். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள நிலம்பூரில் பிரதமர் கிராமிய சாலைத் திட்டத்தின் கீழ் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. இதை வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி நேற்று மாலை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் செய்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் மாலையே நிலம்பூர் தொகுதி சிபிஎம் எம்எல்ஏவான அன்வர் இந்த ரோட்டை திறந்து வைத்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பிரதமர் கிராமிய சாலைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ரோட்டை எம்பி தான் திறந்து வைக்க வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய கிராம வளர்ச்சித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதை மீறி சிபிஎம் எம்எல்ஏ அன்வர் ரோட்டை திறந்து வைத்தது கடும் கண்டத்திற்குரியதாகும் என்று காங்கிரசார் கூறினர்.

இது குறித்து சிபிஎம் எம்எல்ஏ அன்வர் கூறியது: ஒன்றிய மற்றும் மாநில அரசு இணைந்து தான் இந்த ரோட்டை அமைக்கிறது. தன்னுடைய அறிவுறுத்தலின்படியே நிலம்பூரில் ரோடு போடப்பட்டது. தவறான தகவல்களை கூறி சாலையை திறந்து வைக்க ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியினர் அழைத்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் நேற்று நிலம்பூர் வந்த ராகுல் காந்தி சர்ச்சைக்குள்ளான சாலையை மீண்டும் திறந்து வைத்தார். ஒரே சாலையை எம்எல்ஏவும், எம்பியும் திறந்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கேரள மாநிலத்தில் ஒரே சாலைக்கு 2 திறப்பு விழா: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ, ராகுல் காந்தி திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Marxist MLA ,Rahul Gandhi ,Thiruvananthapuram ,CPM MLA ,Malappuram ,
× RELATED உடல் நலக் குறைவு காரணமாக கேரளாவில் ராகுல் காந்தியின் பிரசாரம் ரத்து