×

அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை சார்பில் குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பு நினைவு அஞ்சல்தலை வெளியீடு

சென்னை: அப்போலோ புற்றுநோய் மருத்துவமனையுடன் இந்திய தபால் துறை இணைந்து “குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பு” என்ற பெயரில் புதிய நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. அப்போலோ புற்றுநோய் மருத்துவமனையுடன் இந்தியா தபால் துறை இணைந்து “குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பு” என்ற பெயரில் விழிப்புணர்வுக்கான நினைவு அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. அப்போது அப்போலோ புற்றுநோய் மருத்துவனை சார்பில் 60,000 அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. இந்த அஞ்சல்தலையில் உற்சாகம் நிறைந்த குழந்தையின் முகமும் அதனோடு ஒரு கியுஆர் குறியீடும் இணைந்திருக்கிறது.

இக்குறியீடு, “குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பில்” தொடக்க நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கும் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் மருத்துவர்கள், குழந்தைப்பருவ புற்றுநோயை வென்று வாழ்பவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் அஞ்சல் துறையின் முக்கிய நபர்கள் நடத்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை தலைமை இயக்குநர் ஷீலகேதன், தமிழ்நாடு போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீதேவி, டாக்டர் ரேவதி ராஜ், புற்றுநோயை வென்ற சிறுவன் ஆதர்ஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீதேவி கூறுகையில், இது குழந்தைப்பருவ புற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய யுத்தத்தில் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் கனிவான முன்னேற்ற நடவடிக்கையாகும். உலகெங்கிலும் இந்த முன்னெடுப்பு திட்டம் உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறோம். இந்த சிறிய ஆனால் சக்தி வாய்ந்த குறியீட்டின் ஆற்றலை மேலும் மேம்படுத்தவும், புற்றுநோயை எதிர்த்து போராடும் இளம் வீரர்களின் வாழ்க்கையில் ஆழமான மாற்றத்தை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றார்.

The post அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை சார்பில் குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பு நினைவு அஞ்சல்தலை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Childhood ,Apollo Cancer Hospital ,Chennai ,Indian Postal Department ,
× RELATED குழந்தை பருவ நோய்த்தடுப்பில் உள்ள...