×

மிளகுக் குழம்பு

தேவையானவை

சின்ன வெங்காயம்-50 கிராம்,
பூண்டு – 15 பற்கள்
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவைக்கேற்ப.
வறுத்து அரைப்பதற்கு
மல்லி (தனியா)- 3 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி
பச்சரிசி – 1 தேக்கரண்டி.
தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் – 6 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

முதலில் புளியை தண்ணீர்விட்டு கரைத்துக் கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், அடுப்பில் வாணலியை வைத்து, 1 தேக்கரண்டி, எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர்விட்டு பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். பின்னர், அதே பாத்திரத்தில் 3 தேக்கரண்டி, எண்ணெய்விட்டு காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அதன்பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும். தொடர்ந்து புளிக் கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி உப்பு சேர்த்து 20 நிமிடங்களுக்கு மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.இதற்கிடையில், மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய பாத்திரம் வைத்து, அதில் 2 தேக்கரண்டி, எண்ணெய்விட்டு சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, குழம்பில் சேர்த்து கிளறி இறக்கவும்.

The post மிளகுக் குழம்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!