×

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு: பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு 2 ஆண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். இவரின் பயிற்சிக்காலம் கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவடைந்தது. அதாவது, சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது.

அந்த தோல்வியுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியும் ராகுல் டிராவிட்டுக்கு முடிவடைந்தது. இத்தகைய சூழலில் புதிய பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. முன்னாள் வீரர்களான லட்சுமன் நியமிக்கப்படுவார் என்ற கருத்துக்களும் எழுந்தது. இந்நிலையில், ராகுல் டிராவிட்டின் பதவி காலத்தை நீட்டித்து பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது எதிர்வரும் போட்டிகளிலும் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. எத்தனை ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு என்ற விவரம் வெளியாகவில்லை. பயிற்சியாளராக தொடர டிராவிட் ஒப்புதல் அளித்துள்ளார். இனிவரும் காலங்களில் சிறப்பான சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட் மட்டுமின்றி அவருடன் பணிபுரியும் அனைவருக்கும் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு: பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Indian cricket team ,Rahul Travit ,PCCI ,Delhi ,Dinakaran ,
× RELATED இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை...