×

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது: காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி..!!

சேலம்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பின் முப்பெரும் விழா கோவையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறுபான்மை மக்களின் பாதுகானைர் என்ற விருது வழங்கப்பட்டது. கோவையிலிருந்து இன்று சேலம் வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. காய்ச்சல் பரவலை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் மகளிரிடம், படிவம் கொடுத்து பல்வேறு தகவல்கள் போக்குவரத்து துறையால் பெறப்படுகின்றன. அதில், மகளிரின் செல்போன் எண், சாதி உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படுவது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், டெல்டா விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் முழுமையான விளைச்சலை பெறவில்லை என்பதால் டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று கூறினார். மக்களுக்கு முறையான பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

The post தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது: காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,EDAPPADI PALANISAMI ,Salem ,Tamil Nadu Unified Christian Federation ,
× RELATED சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை...